பழைய போகம்பறை சிறைச்சாலையில் கடமையில் இருந்த சிறைக் காவலர் பணி இடைநீக்கம்
பழைய போகம்பறை சிறைச்சாலையில் கடமையில் இருந்த சிறைக் காவலர் ஒருவர், தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து ஈசி கேஷ் மூலம் பணம் பெற்றமை தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏகநாயக்கவின் தகவல்படி, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சிறைவாசம் அனுபவிப்பதற்காக அனுப்பப்பட முன்னர் பழைய போகம்பறை சிறைக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்படுகிறார்கள்.
இந்த நிலையில் சிறைச்சாலையில் உள்ள ஒரு காவலர். சந்தேகநபர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குவதாக உறுதியளித்து அவர்களிடமிருந்து ஈசி கேஷ் மூலம் பணம் பெறுவது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணையின் போது காவலர் மூன்று சந்தேகநபர்களிடமிருந்து 9,000 ரூபா பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்தே சிறைச்சாலை தலைமையகம் அவரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
