துமிந்த சில்வாவின் விடுதலையை கண்டித்து கைதிகள் ஆர்ப்பாட்டம்
பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்கக்கோரி இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பங்கேற்றனர்.
சித்திரவதை தொடர்பான சர்வதேச தினத்தை முன்னிட்டு(ஜூன் 26) இணைந்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்தமை காரணமாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இதற்கிடையில், வெலிக்கடை சிறைச்சாலையின் சில கைதிகள் இன்றும் சிறையின் கூரை மீது ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர்.
கொலை குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற ஜனாதிபதி மன்னிப்பு தமக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
துமிந்த சில்வாவை இந்த வாரம் ஜனாதிபதி கோட்டபாய, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுவித்தார்.
ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பாரத லட்சுமன் பிரேமச்சந்திரவை 2011 ல் கொலை செய்த வழக்கில் துமிந்தா சில்வா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.





ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
