சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் விடுவிப்பு
நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
இதன்போது, அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பொதுமன்னிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா
அந்தவகையில், வவுனியா (Vavuniya) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி - திலீபன்
யாழ்ப்பாணம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் (Jaffna) சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ். இந்திரகுமார் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இவர்களில் பெண் ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
77 ஆவது சுதந்திர தினமான இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |