யாழ்.நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சிறைக்கைதி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) சிறைச்சாலையில் இருந்து யாழ்.நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்து வரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று (12) காலை வழக்கொன்றுக்காக அழைத்து வரப்பட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரே உயிரிழந்தவராவார்.
உயிரிழப்புக்கான காரணம்
குறித்த கைதி பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்புபட்டவர் என பொலிஸார் மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam