வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோட்டம்
வவுனியா வைத்தியசாலையில் உடல் நலப் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
மன்னாரில்(Mannar) 9 வயது சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரே இவ்வாறு வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
மன்னார் - தலைமன்னார் பகுதியில் குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய 55 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் உடல் நலப் பாதிப்பு காரணமாக சந்தேகநபர் வவுனியா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை (03.04.2024) வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவரை தேடும் பணியில் சிறைக்காவலர்களும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
