காலி சிறைச்சாலையில் கைதி தற்கொலை
காலி சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் நேற்றிரவு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மெட்டிவல தெல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான கைதியே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இவர் சிறைச்சாலையில் தனியான சிறையறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் சரத்தின் பட்டியை (லுங்கி) பயன்படுத்தி சிறையறைக்குள் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள், கைதியை மீட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கொள்ளை, போதைப் பொருள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த இந்த கைதிக்கு எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam