செய்யாத குற்றத்திற்காக 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இளைஞன்

Sri Lanka Police Sri Lankan Tamils Batticaloa Supreme Court of Sri Lanka
By Steephen May 26, 2022 01:20 PM GMT
Report

2009 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கி, தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞன் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சேர்ந்த சுந்தரலிங்கம் கேதிஸ்வரன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத அமைப்பொன்றில் உறுப்பினர் எனவும் இரண்டு பொலிஸாரை கொலை செய்தார் எனவும் குற்றம் சுமத்தி, கேதிஸ்வரன் தனது 21 வயதில் கைது செய்யப்பட்டார்.

செய்யாத குற்றத்திற்காக 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இளைஞன் | Prison Youth Court Police

அக்கரைபற்றில் இருந்து பொத்துவில் நோக்கி பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொய்யாக புனைந்த வாக்குமூலம் ஒன்றை சமர்ப்பித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.

இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை நடத்திய மொனராகலை மேல் நீதிமன்றம் கேதிஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், கேதிஸ்வரன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் கேதிஸ்வரனை சகல குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.  13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்யாத குற்றத்திற்காக 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இளைஞன் | Prison Youth Court Police

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US