ஷஷி வீரவன்ச தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றின் முடிவு
முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தனக்கு எதிராக வழங்கப்பட்ட குற்றத்தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
விதிக்கப்பட்ட தண்டனை
முன்னதாக, குறித்த வழக்கில், ஷஷி வீரவன்ச குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

எனினும், 2026 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் திகதி மேல் நீதிமன்றம் அவரது மேன்முறையீட்டை நிராகரித்து, நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் தண்டனையையும் உறுதி செய்தது.
மீண்டும் உறுதியான தண்டனை
இதனையடுத்து, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.
அந்த மேன்முறையீட்டை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், அதனை நிராகரித்ததன் மூலம் ஷஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை இறுதியாக உறுதி செய்துள்ளது.