ஜனாதிபதி கோட்டாபய கூறியதாக சீன ஊடகங்களில் அதி முக்கியத்துவம் பிடித்த செய்தி
சீனாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தத் தான் முன்னுரிமை வழங்கி இருப்பதாகவும் சீனாவின் அபிலாஷை சம்பந்தமாபன விடயங்களுக்குக் கூடிய ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியதாகச் சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வோய் போஃங்கின் இலங்கை விஜயம் தொடர்பான வெளியிட்டுள்ள செய்தியில் சீன ஊடகங்கள் இதனைக் கூறியுள்ளன.
சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ உட்படப் பலதுறைகளில் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகங்கள் கூறியுள்ளன.
இலங்கை சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதுடன், பிராந்தியத்திற்கு அப்பால் உலக வல்லரசுகளின் அதிகாரங்களுக்கு அடிபணியாது எனவும் எந்த நாட்டுடனும் இலங்கை கூட்டணி அமைக்காது என இலங்கை ஜனாதிபதி, சீன பாதுகாப்பு அமைச்சரிடம் கூறியதாகவும் சீன ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்திற்கு அப்பால் உலக வல்லரசுகளை தனது பதவிக் காலத்தில் முக்கியத்துவமாக கருதுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை இக்கருத்து தெளிவாக கூறுகிறது.
இதேவேளை, சர்வதேச நாடுகள், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு தான் அடிபணிய போவதில்லை என அறிவித்திருப்பது இந்தியாவின் நிலையை கேள்விக்குட்படுத்துவதுடன் இதில் இந்தியாவுக்கு மறைமுக செய்தி இருக்கின்றது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
You My Like This Video
ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம் News Lankasri
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam