எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இறுதியாக இருந்த அமைச்சரவையை சிறிய மாற்றங்களுடன் தற்காலிகமாக நியமித்தார்.
தீர்மானத்தை மாற்றிக்கொள்ளாத ஜனாதிபதி

நிரந்தர அமைச்சரவையை நியமிக்க திகதிகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் பொதுஜன பெரமுனவுடன் இணக்கத்தை ஏற்படுத்த முடியாத காரணத்தினால், நிரந்தர அமைச்சரவையை நியமிக்க முடியாமல் போனது.
குறிப்பாக பொதுஜன பெரமுன தரப்பில் அமைச்சு பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படுவதை ஜனாதிபதி முற்றாக நிராகரித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதியிடம் சில முறை மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி தனது தீர்மானத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
ஜனாதிபதி எகிப்தில் இருந்து நாடு திரும்பியதும் புதிய அமைச்சரவை பதவியேற்கும்

இறுதியாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இணங்கியதாக கூறப்படுகிறது.
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த வார இறுதியில் எகிப்துக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார். அங்கிருந்து நாடு திரும்பியதும் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 13 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri