வாகனப் பதிவு எண் தகடுகள் அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்
ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகனப் பதிவு எண் தகடுகள் அச்சிடும் பணி நேற்றையதினம்(8) அதிகார பூர்வமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
வேரஹெரவில் உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் மோட்டார் வாகன ஆய்வு மற்றும் பயிற்சி மையத்தில் நிறுவப்பட்ட அச்சிடும் பிரிவில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மருத்துவர் பிரசன்ன குணசேன தலைமையில் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கடந்த 22 ஆண்டுகளாக வாகனப் பதிவு எண் தகடுகளை அச்சிட்டு வந்த தனியார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஒப்பந்தக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அச்சிடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
அச்சிடும் பணி
பதிவு எண் தகடுகளை அச்சிடுவதற்குப் பொருத்தமான ஒரு புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஒரு முறையான கொள்முதல் செயல்முறையைத் தொடங்கியது.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்காசிய தொழில்நுட்ப நிறுவனமும் (South Asian Technologies) மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களமும் ஒரு ஒப்பந்தத்தின் கீழ் இந்தப் பதிவு எண் தகடுகளை அச்சிடும் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளன.

அதன்படி, மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களுக்கும் பதிவு எண் தகடுகள் அச்சிடும் பணி இன்று முதல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
பதிவு எண் தகடு அச்சிடும் பணி முடிந்தவுடன், புதிய திட்டத்தின் கீழ் இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு குறுஞ்செய்தி மூலம் வாகன உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
விரைவில் அவிழும் ஈஸ்டர் தாக்குதலின் மர்மங்கள்! சுரே சாலே தரப்பின் பொய்களுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றில்
மோசமடையும் வானிலை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்..! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை