நாட்டில் நாணயத்தாள்கள் அச்சிடுவது நிறுத்தம்: பந்துல குணவர்தன
நாட்டில் தற்போது நாணயத்தாள்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (17.01.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் காணப்படும் சூழ்நிலையில் பணத்தை அச்சடிக்க முடியாது. நாணயத்தாள்களை அச்சடித்தால் எதிர்காலத்தில் கடனை பெற்றுக்கொள்ள முடியாது.
கொள்கை ரீதியில் நிறுத்தம்
திருப்பிச் செலுத்தப்படாத கடனுக்காக நாணயத்தாள்களை அச்சிடுவதை அரசாங்கம் கொள்கை ரீதியில் நிறுத்தியுள்ளது.
இதனால் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாத நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
அத்துடன், டிசம்பர் மாதத்தில் செலவுகள் எவ்வாறு சமாளிக்கப்பட்டது என்பது குறித்து நிதி அமைச்சின் செயலாளரிடம் புள்ளிவிபரத் தரவுகளை வழங்குமாறு கோரியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
