அதிபர் ஆசிரியர் சங்கத்தின் சம்பள முரண்பாட்டை தீர்க்காத ரணில் : எழுந்துள்ள கண்டனம்
அதிபர் ஆசிரியர் சங்கத்தின் சம்பள முரண்பாட்டினைத் தீர்க்காது ரணில் விக்ரமசிங்க இனவாத ரீதியிலான பிரச்சினைகள் முன்னெடுப்பதனை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பணத்தில் நேற்று(09.07.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ் பாடசாலைகள்
ரணில், ராஜபக்ச அரசாங்கம் ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தினை முடக்கியதாக குறிப்பிட்டார். மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்களை பாதுகாத்துக் கொண்டு அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்கு முன்வரவில்லை என்றும் இதன் போது தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க எமது போராட்டம் தொடர்பாக தமிழ் பாடசாலைகளில் எவ்வித போராட்டமும் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.
இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து நமது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக ரெலோவின் தலைவர் செல்வத்தைத் தெரிவு செய்க! புளொட்டுக்கு ஜனா கடிதம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri