தாய்லாந்தில் மாணவனின் துப்பாக்கிச் சூட்டில் அதிபர் பலி!
தாய்லாந்து- ஹட் யாய் (Hat Yai) நகருக்கு அருகிலுள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அதிபர் உயிரிழந்துள்ளார்.
இன்றையதினம்(12.2.2026) மாலை பாடசாலை முடிவடையும் நேரத்தில் 18 வயது இளைஞன் ஒருவனால், அதிபரும் மாணவியொருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.
இதன்போது, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பாடசாலை அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மாணவி தற்போது சீரான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தனிப்பட்ட விரோதம்
இதனையடுத்து, சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

முந்தைய காலங்களில் ஏற்பட்ட மனக்கசப்பு அல்லது அதிபர் மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சோகமான இழப்புக்கு பாடசாலை நிர்வாகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த கோட்டாபய : ராஜபக்சர்கள் ஆட்சி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri