மாணவியை கொடூரமாக தாக்கிய அதிபருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழில் 9 வயது பாடசாலை மாணவியை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதிபர் ஒருவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் யாழ் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட மண்கும்பான் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
9 வயது மாணவியை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று (17.07.2023) முன்னிலைப்படுத்தப்பட்ட போது நிதானமிழந்து மாணவியை தாறுமாறாக அடித்ததாக அதிபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
20 தடவைகள் தாக்கியதாக அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு
எஸ்லோன் பைப்பினால் மாணவியை 20 தடவைகள் தாக்கியதாக அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலனுக்காக மேலதிக வகுப்பு நடத்தியாகவும், அப்போது ஒரே விடயத்தை 3 தடவைக் கூறியும் தவறிழைத்ததால், நிதானமிழந்து மாணவியை தாக்கியதாகவும் நீதிமன்றத்தில் அதிபர் தெரிவித்துள்ளார்.
நிதானமிழப்பதும் ஒரு வகை மனநோயே, இதற்கு உளவள சிகிச்சை பெற வேண்டுமென அறிவுறுத்திய நீதவான், 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் அதிபரை விடுவித்து, வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
இதேவேளை, இந்த பாடசாலையில் கல்வி கற்கும் ஏனைய 9 மாணவிகளுக்கும் அதிபர் இவ்வாறு அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
