பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பரபரப்பு - பொலிஸாரினால் அதிரடியாக வெளியேற்றப்பட்ட அதிபர்
கம்பஹா பண்டாரநாயக்க பாடசாலைக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
பாடசாலையில் தற்போதைய அதிபரின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.
போராட்டத்தைத் தொடர்ந்து பொலிஸாரால் பாடசாலையில் இருந்து அதிபர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதிடியாக வெளியேற்றப்பட்ட அதிபர்
பாடசாலைக்கு பொருத்தமான அதிபரை நியமிக்க வலியுறுத்தி, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களால் பாடசாலைக்கு முன்னால் சுமார் 4 மணி நேரம் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழு அதிபருடன் கலந்துரையாடியது.
இதனையடுத்து பதவி விலக அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது, மேலும் அதிபர் கல்வி அமைச்சக்கு அறிக்கை அளித்து தனக்கு வழங்கப்படும் எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து மதியம் 01.00 மணியளவில் பொலிஸாரின் உதவியுடன் அதிபர் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
