அதிகாரிகளுக்கு பிரதமர் விடுத்துள்ள அவசர பணிப்பு
அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (16) அதிகாரிகளிடம் பணித்துள்ளார்.
மக்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நாடாளுமன்ற குழு அறை 02இல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் இதன்போது கேட்டறிந்தார்.
தற்போதைய தொற்றுநோய் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்படாது பாதிக்கப்பட்ட 31,475 போரையும் அவர்களது சொந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது.
சுமார் 15,000 குடும்பங்கள் அதிக அபாயம் மிகுந்த பிரதேசங்களில் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதாகவும், ஆனால் இதுவரை 3,000 குடும்பங்கள் மாத்திரமே வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தற்போது அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் வாழும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் பணித்துள்ளார். ஆபத்தான சூழ்நிலையைக் கண்டறிந்து, அதற்கேற்ப முன்னுரிமை அளித்து, இந்த மக்களை ஆபத்திலிருந்து மீட்கத் திட்டமிடவும் பிரதமர் அறிவுறுத்தினார்.
கனமழை காரணமாக மண்சரிவு, பலத்த காற்று, வெள்ளம், திடீர் வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக இதுவரை 21 மாவட்டங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 262,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, அனுராதபுரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் நிலவும் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அடிக்கடி இடம்பெற்று வருவதனால், அதன் மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
