கோட்டாபய - ரணில் முறுகல் நிலை தீவிரம் - மத்திய வங்கி விவகாரத்தில் அம்பலம்
மத்திய வங்கியின் ஆளுநராக தினேஷ் வீரக்கொடியை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளது.
தினேஷ் வீரக்கொடி பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும், வங்கிகளின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
நந்தலால் வீரசிங்கவுக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்து மோதல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இலங்கை மத்திய வங்கி அதனை இதுவரை நிராகரித்துள்ளது.
எனினும் பிரதமரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரை சாதகமான பதிலை வழங்கவில்லை. அமைச்சு நிகழ்ச்சி நிரல் வர்த்தமானியில் வெளியிடும் போது இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சகத்தின் கீழ் பதிவிட்டு வர்த்தமானி வெளியிட்டுள்ளது.



