இத்தாலியில் சுற்றிவளைக்கப்பட்ட பிரதமர்! உண்மை நிலவரம் என்ன
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இத்தாலி - போலோக்னா நகரில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இத்தாலி மக்கள் பிரதமரை சூழ்ந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ஜி20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து நேற்று (12) பிற்பகல் வெளியேறிய போது அவரை காண்பதற்காக பெருந்தொகையான மக்கள் ஹோட்டல் வளாகத்தின் அருகே ஒன்றுகூடினர்.
பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியாருக்கு மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தங்களது கையடக்கத் தொலைபேசிகளினூடாக புகைப்படங்களை எடுப்பதற்கும் வாழ்த்து தெரிவிப்பதற்கும் முயற்சித்தமையை காணக் கிடைத்தது.
ஜி20 சர்வமத மாநாட்டில் உரையாற்றுவதற்காக சென்ற கௌரவ பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்து மரியாதை செய்தார்.
பிரதமர் நேற்று பிற்பகல் ஜி20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியதுடன், இம்மாநாடு நாளை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
PM @PresRajapaksa greets the Sri Lankan expatriate community in the city of Bologna, Italy. PM Mahinda Rajapaksa is presently in Italy for the G20 Interfaith Forum. pic.twitter.com/KoWX9sXASv
— G. Cassilingham (@CassilingamG) September 13, 2021