பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த ரணில்! வழங்கப்பட்டுள்ள விளக்கம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றதும் அவசர நிலையை பிரகடனப்படுத்துவார் என பிரதமரின் பேச்சாளர் தினூக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தொடர்பில் விளக்கம்
அதன் பின்னர் பதில் ஜனாதிபதி என்ற வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு பதில் ஜனாதிபதி என்ற ரீதியில் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.