மத்திய வங்கி ஆளுனருடன் பிரதமரின் நிலைப்பாடு: வெளியான உண்மை தகவல்
மத்திய வங்கி ஆளுனருடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித விரோதங்களும் இல்லை என்று பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் தொடர்பான தவறான செய்திகள்

மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்கவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விரோதங்களை கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதன் காரணமாக அவரை விலக்கிவிட்டு தினேஷ் வீரக்கொடியை புதிய ஆளுனராக நியமிப்பதில் ரணில் முயற்சி செய்வதாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வௌியாகியிருந்தன.
பிரதமர் அலுவலகத்தின் தகவல்

குறித்த செய்திகள் பொய்யானவை எனவும் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
மேலும், நந்தலால் வீரசிங்கவுடன் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது உத்தியோகபூர்வ ரீதியிலோ பிரதமருக்கு எந்தவித விரோதங்களும் இல்லை எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி ஆளுனர் பதவி தொடர்பில் தனது பெயர் தொடர்புபடுத்தப்படுவது குறித்து தினேஷ் வீரக்கொடியும் மறுப்புச் செய்தி வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.