சுற்றுச்சூழல் அபிவிருத்திக்கு விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
பொருளாதார வளர்ச்சியின் பெயரால் இயற்கை வளங்களை அழிப்பது ஒருபோதும் அர்த்தமுள்ள அபிவிருத்தியாக அமையாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல முக்கிய திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் கொழும்பிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட “பிளாஸ்டிக், கண்டுபிடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேறுதன்மை” தொடர்பான 3ஆவது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 2027-2029 காலப்பகுதியில் 34 பில்லியன் ரூபாய் செலவில் "பிவிதுரு புரவர" தேசிய கழிவு முகாமைத்துவ திட்டம் செயல்படுத்தப்படும்.
கழிவு முகாமைத்துவம்
இந்தத் திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத கழிவுகள் சூழலில் கொட்டப்படுவதைக் குறைத்தல், மறுசுழற்சி மற்றும் உரம் தயாரிப்பை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு சட்டங்கள் மட்டும் போதாது, மாறாக, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை கல்வி முறையின் மூலமே கட்டியெழுப்ப வேண்டும். அதே போன்று, புதிய கல்வி மறுசீரமைப்புகள் ஊடாக சுற்றுச்சூழல் கல்வி, கழிவு முகாமைத்துவம் மற்றும் வட்டப் பொருளாதாரக் கருத்துக்களைப் பாடசாலைக் கலைத்திட்டத்தில் நடைமுறை ரீதியாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
பாடசாலை மட்டத்தில் “பசுமைப் பாடசாலை” கருப்பொருளை ஊக்குவித்து, சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை “பூஜ்யக் கழிவு(Zero Waste)” பழக்கத்துக்கு வழிநடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மாசடைந்த நிலத்தையோ அல்லது பிளாஸ்டிக்களால் நிறைந்த கடலையோ அன்றி, சுதந்திரமாக சுவாசித்து ஆரோக்கியமாக வாழக்கூடிய தூய்மையான, பசுமையான சூழலையே எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும் என்றார்.
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam