பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானிய மக்களுக்கு வழங்கியுள்ள ஐந்து வாக்குறுதிகள்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், பிரித்தானிய மக்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
புத்தாண்டில் தனது முதல் உரையில் ரிஷி சுனக் இந்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.
பணவீக்கத்தைப் பாதியாகக் குறைத்தல், பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்தல், நாட்டின் கடன் சுமையைக் குறைத்தல், மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்தல் மற்றும் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்துதல் என்பவற்றை தனது வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார்.
ஐந்தாவது வாக்குறுதி

ஐந்தாவது வாக்குறுதி, சட்ட விரோதமாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரை கட்டுப்படுத்துதல் ஆகும்.
அது குறித்து விவரித்த ரிஷி சுனக், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுத்து நிறுத்த புதிய சட்டங்கள் உருவாக்க இருக்கிறோம்.
நீங்கள் சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், விரைவாக நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்பதை உறுதி செய்வதுதான் எனது ஐந்தாவது வாக்குறுதி என கூறியுள்ளார்.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam