பிரதமர் செயலகத்தின் செலவுகளை குறைத்து அரசை காப்பாற்றிய பிரதமர்
பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் பிரதமர் அலுவலகத்தின் செலவை 46 வீதத்தால் குறைத்ததாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமராக பதவியேற்கும் முன்னர் பிரதமர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்ததாகவும் தற்போது அந்த எண்ணிக்கை 285 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம்
இதன் காரணமாக சம்பள செலவு 39 வீதத்தினாலும், எழுதுபொருள் செலவு 74 வீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனப் பராமரிப்புச் செலவை 70 வீதத்தாலும், எரிபொருள் விலையை 26 வீதத்தாலும், இயந்திரம் மற்றும் உபகரணங்களின் விலையை 31 வீதத்தாலும் குறைக்க முடிந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர், இதன் மூலம் தனது அலுவலகத்தின் சேவைகளை பாதிப்பின்றி பராமரிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களுக்கு தெரிந்த உண்மை, ஷாக்கில் ஆனந்தி எடுத்த சோகமான முடிவு... சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி! பரஸ்பர வரி உயர்வால் உலகப் பொருளாதாரத்தில் அதிர்ச்சி News Lankasri
