ஊடுருவலாளர்களால் முடக்கப்பட்ட இந்திய பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு
ஊடுருவலாளர்களால் முடக்கப்பட்ட இந்திய பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு. பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஊடுருவல் (ஹேக்) செய்யப்பட்டதாக இந்திய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கம் PM @narendramodi என்ற பெயரில் உள்ளது.
இதில் பல மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்வோராக இருந்து வருகின்றனர். இந்தநிலையில், இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஊடுருவலாளர்களால் (ஹேக்கர்களால்) சிறிது நேரம் முடக்கப்பட்டது.
எனினும் சிறிது நேரத்தில் அந்த கணக்கு மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக இந்திய பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடுருவல் (ஹேக்) செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.





புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ராணுவத்தைக் களமிறக்கும் பிரித்தானிய அரசு News Lankasri

தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
