கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவாத்தை மூலம் அரசாங்கம் மேலும் வலுப்பெறும் - பிரதமர்
ஆளும் கூட்டணி கட்சிகளுடன் நடத்தப்பட உள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அரசாங்கம் மேலும் வலுப்பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் எதிர்வரும் 19ஆம் திகதி கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் மூலம் அரசாங்கம் மேலும் பலப்படுத்தப்படும் எனவும் சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் ஆளும் கட்சிக்குள் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் உருவாகும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தினாலும், ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே தினக் கொண்டாட்டங்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல் என்பன குறித்து தீர்மானம் எடுக்கும் போது ஆளும் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri
