உங்களோடு மோதிக்கொண்டிருக்க எமக்கு நேரமில்லை! எதிர்க்கட்சிகளுக்கு ஹரிணியின் பதில்
எதிரணிகளின் ஒன்றிணைவுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது, மாறாக எதிரணியை ஆளுங்கட்சி குறிவைக்கவில்லை, அதற்கு எமக்கு நேரமும் கிடையாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்
அவர் மேலும் உரையாற்றுகையில், "பல கட்சி முறைமை மற்றும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என எதிரணி தரப்பில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஜனநாயகத்துக்கு எங்கு, எவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை எதிரணி விளக்கினால் நல்லது. தராதரம் பராது சட்டத்தை உரிய வகையில் செயற்படுத்துவதற்குப் பெயர்தான் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்பதா?

பல கட்சி ஆட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாம். எதிரணியில் உள்ள பல கட்சிகள் ஒன்றிணைவதுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாகும். எனவே, பல கட்சி முறைமையை எதிரணிதான் நாசமாக்கியுள்ளது.
நிலைமை
தமது கட்சியை பாதுகாத்து அதனை வலுப்படுத்துவதற்கு எதிரணிகளால் முடியாமல்போயுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க ஆளுங்கட்சியை குறைகூறுவது ஏற்புடையது அல்ல.
நாம் எதிரணியைக் குறிவைக்கவில்லை. அதற்கு நேரமும் கிடையாது. ஏனெனில் மக்களுக்கான சேவையே எமக்கு முக்கியம்" என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri