அரசாங்கத்தின் நோக்கத்தை வெளிப்படையாகக் கூறிய பிரதமர் ஹரினி
அரச சேவையை அரசாங்கம் ஒருபோதும் அற்பமானதாகக் கருதுவதில்லை என்று பிரதமர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் மீதான மக்களின் நம்பிக்கை, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக ஊழியர்களிடையே உரையாற்றிய அவர், பொதுச் சேவைகள், அரச பொறிமுறைகள் மற்றும் அரசியல் அதிகாரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
எதிர்மறையான அணுகுமுறை
அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான பொது நம்பிக்கையே தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானது.
அது நம் நாட்டில் இல்லை. அரசியல்வாதிகள் மற்றும் பொது சேவைகள் மீது மக்களுக்கு எதிர்மறையான அணுகுமுறை உள்ளது.
இந்நிலையில், குறித்த சேவைகள் பயனற்றவை என்ற பொதுக் கருத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
