கல்வி சீர்திருத்தம்: மாணவர்களின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த கல்வி அமைச்சர்
கல்வி தொடர்பான முடிவுகளை குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
புத்தளம் சாஹிரா முஸ்லிம் கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கல்வி தொடர்பான முடிவுகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குழந்தைகள் எப்போதும் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் நலனுக்காகவே கல்வி தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் விளைவுகளை நாடு தற்போது எதிர்கொள்கிறது. முன்னோக்கிச் செல்லும் முடிவுகள் இளைய தலைமுறையினரின் மகிழ்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் இருக்க வேண்டும்.
அத்துடன், கூடுதலாக, சமூக அல்லது பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாணவர்களுக்கும் சமமான மற்றும் எல்லையற்ற கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அரசாங்கத்தின் கொள்கை உறுதி பூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.