மனுஷ நாணயக்காரவை தொடர்புக்கொண்டு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரதமர்
பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் பிறந்த நாளில் அதிகாலையிலேயே தொடர்புக்கொண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதை பல காலமாக செய்து வருகின்றார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாலையிலேயே அவரை தொடர்புக்கொண்டு பிரதமர் வாழ்த்து கூறியுள்ளார்.
வாழ்த்து கூறிய பின்னர், தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என பிரதமர், மனுஷ நாணயக்காரவிடம் வினவியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள நாணயக்கார, “ நாங்கள் தற்போது அரசாங்கம் செய்யும் தவறுகளை விமர்சித்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.“ நல்லது, நல்லது ” பிரதமர் இதற்கு பதிலளித்துள்ளார்.
மனுஷ நாணயக்கார ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பிரதானமான ஒருவர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக அரசியலுக்கு பிரவேசித்த அவர், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போது, அவருக்கு ஆதரவு வழங்கி வந்தார். தற்போது அவர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரராக பதவி வகித்து வருகின்றார்.