அருட்தந்தை மீதான தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று(29) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க கம்பஹா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களது பணி இடைநீக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை அடையாள அணிவகுப்பின் போது பாதிரியாளர் அடையாளம் கண்டுள்ளார்.
அவர்களில் ஒருவரே தன்னைத் தாக்கியவர் என்றும் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இரு உத்தியோகத்தர்களும் அந்தத் தருணத்தில் அருகில் நின்றவர்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று(29.01.2026) குறித்த உத்தியோகத்தர்களை கம்பஹா நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இது தொடர்பான வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களில் 3 சார்ஜன்ட்களும் 3 கான்ஸ்டபிள்களும் அடங்குகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri