'யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022' துடுப்பாட்ட சுற்றுப்போட்டி: இன்றைய போட்டிகளின் விபரம்(Live)

Jaffna Hindu College IBC Tamil Jaffna Sri Lanka Priders Premier League
By Chandramathi Sep 04, 2022 05:37 AM GMT
Report

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 நான்காவது நாள் சுற்றுப்போட்டி இன்று (04) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம் பெறுகின்றது.

தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இன்றைய போட்டிகள் யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் இன்று மூன்று போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில்,

முதலாவது போட்டியில் ஜப்னா றோயல்ஸ் மற்றும் றைசிங் ஸ்ரார்ஸ் ஆகிய அணிகளும், இரண்டாவது போட்டியில் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் மற்றும் சுழிபுரம் றைனோஸ் ஆகிய அணிகளும், மூன்றாவது போட்டியில் அரியாலை கில்லாடிகள் 100 மற்றும் கிரிகெட் நைட்ஸ் ஆகிய அணிகளும் மோதிக்கொள்கின்றன.

போட்டி - 1(நேரலை)


இன்றைய நாளுக்கான முதலாவது போட்டி - ஜப்னா றோயல்ஸ் எதிர் றைசிங் ஸ்ரார்ஸ் இதுவரை முடிவடைந்த போட்டிகளின் ஆட்ட நிலவரங்கள் இதேவேளை,

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் இதுவரை 8 போட்டிகள் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை முடிவடைந்த போட்டிகளின் ஆட்ட நிலவரங்கள் வருமாறு, 


ஆட்ட நிலவரம்

யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாவது நாள் (28.08.2022) போட்டி ஆரம்பமாகியுள்ளது.

தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 நடத்தப்படுகின்றது.


நேற்று சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 "யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாவது நாள் (28.08.2022) போட்டி ஆரம்பமாகியுள்ளது.

தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 நடத்தப்படுகின்றது.


நேற்று சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய இன்றைய போட்டியில் முதலாவது ஆட்டமாக யாழ் சீட்டாஸ் எதிர் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இதனையடுத்து இரண்டாவது ஆட்டம் சுண்டிக்குளி ஈகிள்ஸ் எதிர் கொக்குவில் ஸ்ரார்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது .

ஆட்ட நிலவரம்

நேற்று இடம்பெற்ற முதலாவது நாள் ஆட்டத்தின் போது சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியும் அரியாலை கில்லாடிகள் 100 அணியும் மோதிக் கொண்டன.

இதில் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி 31 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

இரண்டாவது போட்டியில் சுழிபுரம் றைனோஸ் அணியும் றைசிங் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இதில் றைசிங் ஸ்ரார்ஸ் அணி 67 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

மூன்றாவது போட்டியில் கிரிக்கெட் நைட்ஸ் அணியும் ஜப்னா றோயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இதில் கிரிக்கெட் நைட்ஸ் அணி 07 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 - 28.08.2022

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 இன்று (27) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 நடத்தப்படுகின்றது.

இந்தச் சுற்றுப்போட்டியில்180 க்கு மேற்பட்ட வீரர்களுடன் 12 அணிகள் பங்குபற்றுகின்றன.

இந்த சுற்றுப் போட்டியானது தொழில்முறையானதாக அமைவதுடன் யாழ். மாவட்ட துடுப்பாட்ட வீரர்களை பொருளாதார ரீதியில் ஊக்குவிப்பதற்கும் முயற்சிக்கின்றது.

இதற்கமைய இந்தப் போட்டிகள் இன்று ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டி -1

“யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் (இருபதுக்கு - இருபது) முதல் போட்டியில் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியும் அரியாலை கில்லாடிகள் 100 அணியும் மோதிக் கொண்டன.

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை கில்லாடிகள் 100 அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றது.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் 100 அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி 31 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஜி.லிங்கநாதன் தெரிவானார்.

போட்டி - 2

தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் சுழிபுரம் றைனோஸ் அணியும் றைசிங் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சுழிபுரம் றைனோஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி,முதலில் துடுப்பெடுத்தாடிய றைசிங் ஸ்ரார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் றைனோஸ் அணி 17. 2 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் றைசிங் ஸ்ரார்ஸ் அணி 67 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக றைசிங் ஸ்ரார்ஸ் அணியில் துடுப்பாட்டித்தில் 43 பந்துகளுக்கு 64 ஓட்டங்களை விளாசிய ஏ. ஜன்சன் தெரிவானார்.


போட்டி - 3

தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது போட்டியில், கிரிக்கெட் நைட்ஸ் அணியும் ஜப்னா றோயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் நைட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, கிரிக்கெட் நைட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா றோயல்ஸ் அணி 19. 3 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் சகல விக்கெட்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.


இதன் மூலம் கிரிக்கெட் நைட்ஸ் அணி 07 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக கிரிக்கெட் நைட்ஸ் அணியில் சகல துறையில் கலக்கிய எஸ். அஜித் தெரிவானார்.

'யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022' துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் மேலும் 3 போட்டிகள் நாளைய தினம்(28) யாழ். இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பங்கு பெறும் அணிகள்

வேலனை வேங்கைகள்

சுழிபுரம் றைனோஸ்

ஜப்னா றோயல்ஸ்

ஜப்னா பன்தேர்ஸ்

ஜப்னா சலன்ஜேர்ஸ்

யாழ் சீட்டாஸ்

சுழிபுரம் கிறீன் ராகன்ஸ்

சுண்டிக்குளி ஈகிள்ஸ்

அரியாலை கில்லாடிகள் 100

கிரிகெட் நைட்ஸ்

கொக்குவில் ஸ்ரார்ஸ்

றைசிங் ஸ்ரார்ஸ்

குறித்த 12 அணிகளை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட வீரர்களை உள்ளடக்கி பிறைடர்ஸ் பிரீமியர் லீக் (PPL) 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம்பெறுகின்றது.

சுற்றுப்போட்டியின் பரிசுத்தொகை விபரம்,

வெற்றியாளர் : 1000000.00/=

இரண்டாம் இடம் : 500000.00/=

மூன்றாம் இடம்: 200000.00/=

நான்காவது இடம்: 100000.00/=


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US