பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி (Live)

Jaffna Hindu College Jaffna Cricket Sri Lanka Cricket
By Mayuri Sep 03, 2022 03:09 AM GMT
Report

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி இன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியானது தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகரசபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் அக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


மோதவுள்ள அணிகள்

இன்று முதலாவது போட்டியில் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியை எதிர்த்து கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி மோதவுள்ளது.

இரண்டாவது போட்டியில் யாழ். சீட்டாஸ் அணியை எதிர்த்து வேலனை வேங்கைகள் அணி மோதவுள்ளது.

மூன்றாவது போட்டியில் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணியை எதிர்த்து ஏ1 ராஜா அணி மோதவுள்ளது.

முதல்நாள் சுற்றுப்போட்டி நிலவரம்

“யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் (இருபதுக்கு - இருபது) முதல்நாள் சுற்றுப்போட்டியில் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியும் அரியாலை கில்லாடிகள் 100 அணியும் மோதிக் கொண்டன.

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி (Live) | Priders Premier League Cricket At Jaffna

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை கில்லாடிகள் 100 அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்கள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் 100 அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி 31 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்டநாயகனாக சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஜி.லிங்கநாதன் தெரிவானார்.

இரண்டாவது நாள் சுற்றுப்போட்டி நிலவரம்

இரண்டாவது நாள் சுற்றுப்போட்டியில் சுழிபுரம் றைனோஸ் அணியும் றைசிங் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சுழிபுரம் றைனோஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய றைசிங் ஸ்ரார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 4 விக்கட்கள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் றைனோஸ் அணி 17. 2 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 9 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதன் மூலம் றைசிங் ஸ்ரார்ஸ் அணி 67 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக றைசிங் ஸ்ரார்ஸ் அணியில் துடுப்பாட்டித்தில் 43 பந்துகளுக்கு 64 ஓட்டங்களை விளாசிய ஏ. ஜன்சன் தெரிவானார்.

மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி நிலவரம்

மூன்றாவது நாள் சுற்றுப்போட்டியில் கிரிக்கெட் நைட்ஸ் அணியும் ஜப்னா றோயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் நைட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, கிரிக்கெட் நைட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா றோயல்ஸ் அணி 19. 3 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் சகல விக்கட்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன் மூலம் கிரிக்கெட் நைட்ஸ் அணி 07 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக கிரிக்கெட் நைட்ஸ் அணியில் சகல துறையில் கலக்கிய எஸ். அஜித் தெரிவானார்.

நான்காவது நாள் சுற்றுப்போட்டி நிலவரம்

நான்காவது நாள் சுற்றுப்போட்டியில் யாழ். சீட்டாஸ் அணியும் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் சீட்டாஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சீட்டாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17.4 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 10 விக்கட்கள் இழப்பிற்கு 110 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா சலன்ஜேர்ஸ் அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 118 ஓட்டங்களை பெற்றது. இதன் மூலம் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணி 2 விக்கட்டுக்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியின் ஜி.ஜெரிக்தூசன் தெரிவானார்.

ஐந்தாம் போட்டி நிலவரம்

ஐந்தாவது நாள் சுற்றுப்போட்டியில் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணியும் கொக்குவில் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்கள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 144 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி 21 ஓட்டங்கள் மூலம் வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்டநாயகனாக அபினாஷ் தெரிவானமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US