மீண்டும் உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை!
மரக்கறிகளின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விலை நிலவரம்
இதனடிப்படையில், மெனிங் சந்தையில் ஒரு கிலோ கிராம் கரட் 250 ரூபாவிற்கும் , போஞ்சி ஒரு கிலோ கிராம் 250 ரூபாவிற்கும், பூசணி ஒரு கிலோ கிராம் 300 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லீக்ஸ் 200 ரூபாவிற்கும், தக்காளி மற்றும் கோவா ஒரு கிலோ கிராம் 150 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறி பயிர்ச்செய்கை பாதிக்கப்படுவதாகவும் இதனால் கடந்த நாட்களை விட இந்த நாட்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri

பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
