ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட உயர்வு!விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால், கடந்த சில தினங்களாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டிருந்தது.
நுகர்வோர் பொருட்கள் இறக்குமதி

இவ்வாறு பொருட்களின் விலைகளை குறைப்பதன் பலன் நேரடியாக நுகர்வோருக்குச் செல்லும்.
மேலும் உருளைக்கிழங்கு, வெங்காயம், சீனி, பருப்பு மற்றும் மிளகாய் போன்ற நுகர்வோர் பொருட்கள் நேரடியாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
டொலருடன் பரிவர்த்தனை செய்து இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்து முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விரைவில் குறையும்.”என தெரிவித்துள்ளார்.
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan