சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 வீதத்தினால் உயர்வு
சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அசாதாரண அடிப்படையில் மருந்துப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் இதனைக் கட்டப்படுத்தி நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 வீதமாக உயர்வடைந்துள்ளது எனவும் இது நோயாளிகளினால் தாங்கிக் கொள்ளக்கூடிய வகையிலானது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அசாதாரணமான விலை உயர்வு..
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, டொலரின் பெறுமதி அதிகரிப்பு என்பனவற்றின் தாக்கத்தை முழுமையாக மக்கள் மீது அரசாங்கம் திணிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் விலைக்கட்டுப்பாட்டுக்குழு உடனடியாக தீர்மானங்களை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வலி நிவாரணிகள் மற்றும் அன்டி பயோடிக் மருந்துகளின் விலைகள் அசாதாரண அடிப்படையில் உயர்வடைந்துள்ளது எனவும் இது மக்களை பெரிதும் பாதிக்கும் எனவும் சிங்கள ஊடகமொன்றிடம் அவர் தெரிவித்துள்ளார்.