வெதுப்பக உணவுகளின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை
எதிர்காலத்தில் பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளுக்கான விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ரொட்டி தவிர்ந்த அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் வெதுப்பக உரிமையாளர்கள் 12 சதவீத வற் வரி செலுத்த வேண்டியிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
வற் வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு பனிஸின் விலை பத்து ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை

சிறு பேக்கரி உரிமையாளர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், அனைத்து வெதுப்பக உரிமையாளர்களில் 60 சதவீதத்தினர் உரிய வரியை செலுத்த வேண்டும் என்றார்.
மேலும், வெதுப்பக உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வற் வரியால் உரிமையாளர்கள் பாதிப்பு

வெதுப்பக தயாரிப்புகளுக்கு மேலதிகமாக, பேக்கரி உரிமையாளர்கள் மாஜரின் மற்றும் பால் பவுடர் போன்ற மூலப்பொருட்களுக்கு 12 சதவீத வற் வரி செலுத்துகின்றனர். எனவே வெதுப்பக பொருட்களுக்கு வற் வரியை நீக்கி நிவாரணம் வழங்க வேண்டுமென பேக்கரி உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சுமார் 2000 சிறிய அளவிலான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri