அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு! அமைச்சர் வழங்கியுள்ள உறுதி
அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தீர்வு காணப்படும் என்று வர்த்தக அமைச்சர் நளின் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பு - டீ.ஆர். விஜேவர்த்தன மாவத்தையில் உள்ள சதொச தலைமையகத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள கிளைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் இன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் நளின் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எமக்கும் சீரான முறையில் நாடு தழுவிய ரீதியில் பொருட்களை விநியோகம் செய்து கொள்ள முடியாமல் இருந்தது.
இன்று தொடக்கம் அந்த சிக்கல் நீங்கி, எரிபொருள் பிரச்சினை இன்மையால் தற்போது சீரான விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொருட்களை மொத்தமாக கையிருப்பில் வைத்திருப்போருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு அவற்றை கிரமமாக கொள்வனவு செய்து விநியோகிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
எனவே இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நீங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நிலாவிடம் வம்பிழுத்தவர்களை தரமான சம்பவம் செய்த குடும்பத்தினர்.. அய்யனார் துணை தெறிக்கும் எபிசோட் Cineulagam
