இலங்கை மக்களின் கழுத்தை நெரிக்கும் விலைவாசி! உண்மை நிலவரம் என்ன?

People Money Sri lanka Economic Dollar
By Benat Jan 14, 2022 01:34 AM GMT
Report
Courtesy: BBC Tamil

2.2 கோடி மக்கள் வாழும் தீவு நாடான இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில், அந்நாட்டின் அந்நியச் செலாவணி கிட்டத்தட்ட 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிந்துவிட்டது. அது சில வார இறக்குமதி செலவுகளை மட்டுமே எதிர்கொள்ளப் போதுமானது.

அதன் விளைவாக, அரசு சில அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிகளைக் குறைக்க வேண்டி வந்தது, அதில் உணவுப் பொருட்களும் அடக்கம். இது போக எரிபொருள் மற்றும் சரக்கு போக்குவரத்து விலை அதிகரிப்பால், பால் பவுடர் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை இன்னும் அதிகரித்தது.

விலைவாசி அதிகரிப்பு இலங்கை மட்டுமே எதிர்கொள்ளும் பிரச்சனையல்ல. இந்தியா, பாகிஸ்தான் போன்ற மற்ற ஆசிய நாடுகளும் பணவீக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. ஆசிய கண்டத்தில் வாழும் மக்கள் தங்களின் தினசரி உணவு மற்றும் எரிசக்தி செலவுகளைச் சமாளிக்க மற்ற செலவுகளைக் குறைத்து வருகிறார்கள்.

தன் நாட்டு மக்களின் உணவுக்கே வெளிநாட்டு இறக்குமதிகளை அதிகம் நம்பி இருக்கும் சிறிய தீவு நாடான இலங்கையில், இந்த விலைவாசிப் பிரச்சனை மோசமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, அந்நாட்டின் சிறிய பால் உற்பத்தித் துறையால், உள்ளூர் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை, எனவே பால் பவுடரை இறக்குமதி செய்கிறது இலங்கை.   

சந்தை நிலவரம்

கொழும்புவில் உள்ள ஜன நெருக்கடி மிகுந்த முக்கிய காய்கறி சந்தையில் டஜன் கணக்கிலான கடை உரிமையாளர்கள் கேரட், பீட் ரூட், கறிவேப்பிலை என பல காய்கறிகளை விற்கிறார்கள். விலைவாசி அதிகரிப்பது குறித்து பல கடை உரிமையாளர்கள் வெளிப்படையாக புகார் கூறுகிறார்கள். மேலும் விலையைக் குறைக்கவும், குறைந்த அளவில் காய்கறி வாங்குவதைக் தவிர்க்கவும் நிறைய பேரம் பேசுவதாகக் கூறுகின்றனர்.

"தற்போதைய மாதாந்திர சம்பளத்தைக் கொண்டு இரு வாரங்கள் மட்டுமே வாழ முடியும், காரணம் விலை வாசி அதிகரித்துவிட்டது. எங்களின் எதிர்காலம் குறித்து எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அரிசியின் விலை கூட அதிகரித்துவிட்டது. அரசு நடத்தும் கடைகளின் முன் நீண்ட வரிசை நிற்கிறது" என பொருள் வாங்க வந்தவர்களில் ஒருவரான சுவர்ணா விளக்கினார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தேவை உச்சத்தில் இருக்க, இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை, வருடாந்திர அடிப்படையில் கடந்த மாதம் 21.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பால் பவுடரின் விலை 12.5% அதிகரித்திருப்பதால், டீக்கடை உரிமையாளர்கள் சங்கம், பால் டீ விற்பதை மொத்தமாக நிறுத்த முடிவு செய்துள்ளனர். தேவை ஏற்பட்டால் மட்டும் அதிக விலைக்கு பால் டீ விற்பனை செய்யப்படும் என்று கூறுகின்றனர்.  

"உணவு விலை அதிகரிப்பை மிகவும் தீவிரமாகக் கருதுபவர்கள் இலங்கை மக்கள். . ஏற்கனவே நாங்கள் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகளால் நிறைய எதிர்மறை உணர்வுகள் நிலவுகின்றன" என்கிறார் வெரைட் ரிசர்ச் என்கிற சிந்தனைக் குழுவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் தேஷல் டி மெல். "இதே அளவில் விலைவாசி அதிகரித்தால் அது சகிப்புத்தன்மையை இழக்கும் கட்டத்துக்கு வெகு அருகே அவர்களை கொண்டு செல்லலாம் என நான் கருதுகிறேன்". என்கிறார் அவர்.

2022 புத்தாண்டுக்கு முன், இலங்கை அரசு தன் அந்நிய செலாவணியை 3.1 பில்லியன் அமெரிக்க டாலராக கரன்சி மாற்று ஒப்பந்தங்கள் மூலம் அதிகரித்தது.

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 45 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அக்கடன்களுக்கு வட்டி கட்ட மட்டும் 6 பில்லியன் டாலர் தேவை. பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகளும் இதே நிலையைத்தான் எதிர்கொண்டு வருகின்றன.

கொரோனா பெருந்தொற்று மற்றும் உலக அளவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை ஏற்றம் ஆகியவை இலங்கையின் பிரச்சனையையும் அதிகரித்துவிட்டன. பெருந்தொற்று காரணமாக இலங்கையின் மிகப்பெரிய வருவாய் தொழிலான சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, சுற்றுலா மூலம் இலங்கை 4 பில்லியன் அமெரிக்க டாலரை வருவாயாக ஈட்டியது, கொரோனாவால் அதில் கிட்டத்தட்ட 90% வருவாய் சரிவை எதிர்கொண்டுள்ளது.  

அரசோ தங்கள் முன் அதிக தேர்வுகள் இல்லை என்கிறது.

"பெருந்தொற்றினால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை மீதான அழுத்தம் அதிகரிப்பு காரணமாக, நாங்கள் இறக்குமதிகள் மீது கட்டுப்பாடு விதிக்க வேண்டி இருந்தது. ஒரு பொறுப்புள்ள அரசாக நாங்கள் அதை நிர்வகிக்க வேண்டும்" என இலங்கை அமைச்சர் சேஹன் சேமசிங்க பிபிசியிடம் கூறினார்.

எதிர்கட்சியினரோ விலைவாசி ஏற்றத்தைக் எதிர்த்து போராட்டங்களை நடத்தினர் "இப்பிரச்சனை நீண்ட காலமாக உருவாகிக் கொண்டிருந்தது. எங்கள் சக்திக்கு மீறி நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் உற்பத்தி செய்வதை விட அதிகம் நுகர்கிறோம்" என்கிறார் இலங்கையின் எதிர்ட்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பொருளாதார சீர்திருத்த அமைச்சரான ஹர்ஷ டி சில்வா.  

 மக்கள் தரப்பில் அதிகரித்து வரும் கோபத்தைக் குறைக்க அரசு சமீபத்தில் $1 பில்லியன் டாலருக்கு ஒரு நிவாரணத் திட்டத்தை அறிவித்தது, அதில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வும் அடக்கம். சில உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மீதான வரியை நீக்கியது, ஏழை மக்களுக்கு வருமான உதவியையும் அறிவித்தது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக, சராசரியாக ஒரு கண்டெயினர் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கு அனுப்புவதற்கான செலவு கடந்த 2020ஆம் ஆண்டில் 2,000 டாலராக இருந்தது, கடந்த ஆண்டு 10,000 டாலராக அதிகரித்துள்ளது.

போக்குவரத்து செலவீனங்கள் அதிகரிப்பு, மீண்டு வரும் பொருளாதார வளர்ச்சியை பாதிப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு அமைப்பு எச்சரித்தது. தங்கள் இறக்குமதிக்கு கடல்வழி போக்குவரத்தை பெரிதும் நம்பி இருக்கும் இலங்கை போன்ற சிறிய தீவு நாடுகள், இறக்குமதி விலை ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படலாம் என அவ்வமைப்பின் மதிப்பீடுகள் கூறியுள்ளன.

எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் மின்சார விலை ஏற்றம் மொத்த விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதோடு போக்குவரத்து சேவை வழங்குபவர்களும் தங்கள் கட்டணத்தை அதிகரிக்கிறார்கள். இலங்கையின் அண்டை நாடான இந்தியாவில், வரலாறு காணாத வகையில் கடந்த நவம்பர் மாதம் வருடாந்திர மொத்தவிலைக் குறியீடு 14.2 சதவீதத்தைத் தொட்டது.

பாகிஸ்தானில் நுகர்வோர் பணவீக்கக் குறியீடு கடந்த டிசம்பர் மாதத்தில் 12.3% தொட்டது. இது கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய உயர்வு. உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை ஏற்றத்துக்கு அதிகரித்து வரும் எரிபொருள் விலை ஏற்றம் காரணமாகக் கூறப்படுகிறது.

2021ஆம் ஆண்டில், உலகளாவிய உணவு விலைக் குறியீடு, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 28% அதிகரித்துள்ளது என உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.

'உள்ளீட்டுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, உலகளவில் சுழ்ந்திருக்கும் கொரோனா பெருந்தொற்று, நிலையற்ற காலநிலை ஆகியவை, 2022ஆம் ஆண்டில் கூட மீண்டும் நிலையான சந்தைக்குத் திரும்புவது தொடர்பாக குறைவாகவே நம்பிக்கையளிக்கின்றன" என்கிறார் உணவு மற்றும் விவசாய அமைப்பின் மூத்த பொருளாதார வல்லுநர் அப்டொல்ரெசா அப்பாஷ்ஷியன்.   

மறுபக்கம் கொழும்புவில், ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருக்கும், நிலுகா தில்ருக்சி போன்ற வெகுஜன மக்கள், பொருட்களின் விலை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் கூட, தொடர்ந்து குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாகிவிடும் என கவலையில் உள்ளனர்.  

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US