பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால் மாத்திரமே ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலையை குறைக்க முடியாதுள்ளதாக நாட்டிலுள்ள பிரதான கோதுமை மா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கலந்துரையாடல் தோல்வி
சந்தையில் தற்போது நெருக்கடியான நிலையில் காணப்படும் கோதுமை மா தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தலைமையில் வர்த்தக அமைச்சில் நடைபெற்றுள்ளது.
எனினும் இந்த கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை எனவும், கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால் மாத்திரமே பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் எனவும் கோதுமை மா நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 15 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
