இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தாலும் விலைகளை குறைக்க மாட்டோம்!
அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாய் வலுவடைந்து வருவதால் உள்ளூர் பாலுற்பத்திகளின் விலைகளைக் குறைக்க மாட்டோம் என உள்நாட்டு பாலுற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கூறுகையில்,உள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் தங்கள் வருமானத்தில் 90 சதவிகிதத்தை பால் உற்பத்தியாளர்களுக்கு புதிய பால் வழங்குவதற்காக செலவிடுகின்றனர்.
அந்நிய செலாவணி

மீதமுள்ள இலாபத் தொகை நிறுவனத்தின் வாகனங்களுக்கான எரிபொருளுக்காக செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் அந்த விலை குறைப்புக்கும் பாலுற்பத்திக்கும் நேரடித் தொடர்பு இல்லை.
நாங்கள் பால் பொருட்களை உற்பத்தி செய்து நாட்டிற்கு விநியோகம் செய்து வருகின்றோம்.

அந்நிய செலவாணி நாட்டை விட்டு வெளியேறுவதை நாங்கள் தடுக்கின்றோம்.
பால் பொருட்களை தயாரிக்கும் செயற்பாட்டிற்காக நாங்கள் வெளிநாட்டிலிருந்து எதையும் இறக்குமதி செய்வதில்லை. எனவே பால் பொருட்களின் விலைகளைக் குறைப்பதில் எந்த அர்த்தமுமில்லை என உள்ளுர் பாலுற்பத்தி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால்மாவின் விலை

எவ்வாறாயினும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையைக் குறைத்துள்ளனர்.
அதற்கேற்ப ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால்மாவின் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் பால்மா தயாரிப்பு சங்கத்தின் தலைவர் அரியசிறி விதானகே தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
ரோஹினி செய்த காரியம், விஜயாவிற்கு பளார் விட சென்ற அண்ணாமலை... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam