நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்
நாட்டில் பல உணவுப் பொருட்களின் விலைகள் இன்று முதல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளில் மாற்றம் ஏற்படாத நிலையிலேயே உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேங்காய் விலை
சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் சில இடங்களில் தேங்காய் ஒன்றின் அதிகபட்ச விலையாக 150 ரூபாய்க்கு விற்கப்படுவதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் ரூபா 80 - 90 வரை விற்கப்பட்ட தேங்காய் ஒன்றின் விலை ரூபா 100-150 வரை அதிகரித்துள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பு
அத்துடன் உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தேனீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சாப்பாடு (Rice and curry) ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் பிரைட் ரைஸ் மற்றும் கொத்து விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி
மேலும், நாட்டில் கோழி இறைச்சியின் விலை 40 ரூபா முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் சாதாரண விலையை விடவும் அதிக விலைக்கு முட்டை விற்கப்படுவதால் விரைவில் கட்டுப்பாட்டு விலை நடைமுறைப்படுத்தப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
