ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்து செய்தி
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க((Ranil Wickremesinghe) விசேட வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளாகும்.
பௌத்த உபதேசம்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பௌத்தர்கள் விளக்குகளை ஒளிரவிட்டு, வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, மிகுந்த பக்தியுடன் இதனைக் கொண்டாடுகின்றனர்.
"சிறந்த நாளைக்காக இன்றே தியாகம் செய்வோம்" என்ற கௌதம புத்தரின் போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காக புத்தர் கொண்டிருந்த பெரும் உறுதிப்பாட்டை, ஒரு நாடாக இந்த இக்கட்டான தருணத்தில் நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
"சப்பத்த சம்மானசோ" அனைவரையும் சமமாக நடத்தும் பௌத்த உபதேசத்தை இன்று நாம் நினைவுகூர வேண்டும். அதேபோல் ஒரு நாடாக அதை நடைமுறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இனம், மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பப்படும் இந்நாட்டை தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு புத்தரின் போதைனைகள் வழிகாட்டும்.
விரைவான பௌதிக வளர்ச்சியை நோக்கி நகரும் உலகில் மனவளர்ச்சியுடன் கூடிய ஆன்மீக மற்றும் கண்ணியமான 'மனிதனை' உருவாக்குவதே இந்த வெசாக் பண்டிகையின் முக்கிய நோக்கம் என்பதை நினைவில் வைத்து, அனைவருக்கும் சிறந்த வெசாக் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
