தமிழின விடுதலைக்காக ஒன்றிணைவோம் : அழைப்பு விடுத்த மாவை
புதிய இணைப்பு
மக்கள் மத்தியிலே தமிழர்களுடைய விடுதலையை பெறுவதை இலக்காகக் கொண்டு எங்களுடைய வாக்குகளை அளித்திருக்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.
இன்று (21) தமது வாக்கினை அளித்துவிட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்களித்த எமது மக்கள் தாம் விரும்பியவாறு இனத்தின் விடுதலையை மையமாகக் கொண்டு வாக்களித்துள்ளார்கள்.
நாங்கள் எல்லோரும் தேர்தல் முடிந்ததற்கு பின்னர் எமது தேசத்தின் இன விடுதலைக்காக அனைவரும் ஒன்றுபடுவோம்.
முதலாம் இணைப்பு
யாழ்.மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |