உருவாகவுள்ள புதிய பயங்கரவாத தடை சட்டம்..! அரசாங்கத்தின் திட்டம்
உலகளாவிய ரீதியில் உருவாகும் பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய பயங்கரவாத தடை சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்காலிக விதிமுறைகளை கொண்ட பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்கும் நோக்கிலான யோசனை தொகுப்பு நேற்றையதினம்(29.05.2025) அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் 240 பேரை கொண்ட குழுவொன்று குறித்த யோசனை தொகுப்பை சமர்ப்பித்துள்ளது.
நடைமுறைகள் ஆரம்பம்
இதன்போது, புதிய பயங்கரவாத சட்டமொன்றை உருவாக்கும் நோக்கில் கடந்த அரசாங்கங்கள் ஆணைக்குழுக்களை நியமித்திருந்த போதிலும் சட்டம் உருவாக்கப்படவில்லை என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போது புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam