பசில் வழங்கிய பணத்திலேயே மல்வானை வீடு நிர்மாணிக்கப்பட்டது: நீதிமன்றத்தில் சாட்சியாளர் சாட்சியம்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் வர்த்தகர் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக மல்வானை வீடு சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கின் சாட்சியாளர்களில் ஒருவரான முதித்த உபாலி ஜயகொடி நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார். இதன் போது வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியின் குறுக்கு விசாரணைக்கு பதிலளித்துள்ள உபாலி ஜயகொடி,
பசில் ராஜபக்ச வழங்கிய பணத்தை ஒப்பந்தகாரருக்கு வழங்கி, மல்வானை வீட்டை நிர்மாணித்ததாக கூறியுள்ளார். ஒப்பந்தகாரருக்கு பணத்தை கொடுத்து அதற்கான பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பற்றுச்சீட்டுக்கள் தனது நிறுவனத்திற்குரியது என்பதையும் ஏற்றுக்கொள்வதாக சாட்சியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டம் தொம்பே தேர்தல் தொகுதியின் மல்வானை பிரதேசத்தில் 16 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்து, அதில் ஆடம்பர வீடு மற்றும் நீச்சல் தடாகத்தை நிர்மாணித்து அரச பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபர், பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை சட்டத்தின் கீழ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
இதனிடையே எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
செய்தியாளர் - அமைச்சர் அவர்களே உங்களது முதலாவது வரவு செலவுத்திட்டம் பற்றி கொஞ்சம் கூறுங்களேன்?
பதில் - அது இரகசியம் செய்தியாளர் - வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு என்ன கிடைக்க போகிறது?
பதில்- மக்களுக்கு கிடைக்காது, மக்களிடம் இருந்து வாங்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri