பாதீட்டை ஆதரிக்க இன்னும் முடிவு இல்லை! நாமல் வழங்கிய பதில் - செய்திகளின் தொகுப்பு
வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிப்பது குறித்து தற்போதே கூறமுடியாது. பாதீடு முன்வைக்கப்பட்ட பின்னர் அதில் உள்ள விடயங்களைக்கருத்திற்கொண்டே முடிவு எடுக்கப்படும்.
அதேபோல ஆதரவு வழங்குவது பற்றியும் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எதிர்வரும் 13 ஆம் திகதி வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.
கடந்த 2015 இல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கும் போது தான் பிரச்சினை ஏற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியிருந்தார்.
எனவே, உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னரே கட்சி முடிவெடுக்கும். அரசியல் நோக்கங்களுக்காக அன்றி, நாடு குறித்து சிந்தித்தே தீர்மானம் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,