மன்னாரில் காணி விடுவிப்பு கூட்டத்தை புறக்கணித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்(Video)
மன்னார் மாவட்டத்தின் கீழ் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது இன்று(19.08.2023) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல் நெறிப்படுத்தலில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள், வனவள திணைக்களை பிரதிநிதிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.
காணி விடுவிப்பு
குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பிலும் அவை விடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகஸ்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான
ரிசாட் பதியுதீன் மற்றும் முன்னால் நகரசபை, பிரதேச சபை தவிசாளர்கள்
உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த கூட்டம் ஏற்கனவே காணி விடுவிப்பு தொடர்பில் உயர் மட்டங்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தெரியப்படுத்துவதற்கான கூட்டமாகவே இடம்பெற்றுள்ளது.
தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டு
அதேநேரம் உள்ளூர் அரச பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் இறுதியான காணி விடுவிப்பு தொடர்பிலும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்களை மேலதிக அனுமதிக்காக அனுப்பிவைப்பதற்கான தீர்மானமும் இதன்போது எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கூட்டத்திற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்ட போதிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இவ்வாறான கூட்டங்களுக்கு உரிய விதத்திலும் உரிய நேரத்திலும் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை எனவும் கூட்டங்களில் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரச தரப்பு அரசியல் பிரதிநிதிகள் வாய்ப்பு வழங்குவதில்லை என்ற அடிப்படையிலேயே தாங்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
