தாதியர்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி தீர்வு
பொது சேவைகள் ஐக்கிய செவிலியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஏனைய இரண்டு கோரிக்கைகளுக்கு வரும் பாதீட்டில் தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
பொது சேவைகள் ஐக்கிய செவிலியர் சங்கத்துடன் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி இந்த முடிவுகளை எடுத்தார் என ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.
இதன்படி செவிலியர்களுக்கான பல்கலைக்கழகத்தைத் திறத்தல், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களின் நிலையை மீண்டும் அமுல்படுத்துதல் உட்பட்ட ஐந்து விடயங்களுக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் பாதீட்டில், 10,000 ரூபா கொடுப்பனவு உட்பட்ட இரண்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இந்த 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து செவிலியர்கள் கடந்த 2 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
