600ற்கும் மேற்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் ஜனாதிபதி செயலகம்! ஹரிணி வெளியிட்ட தகவல்
ஜனாதிபதி செயலகம் தற்போது 634 வாகனங்களைப் பயன்படுத்துகிறது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று(20) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
வாகனங்களின் எண்ணிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஜனாதிபதி செயலகம் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை 200-க்கும் அதிகமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஜனாதிபதி விக்ரமசிங்கவின் பதவிக்காலத்தில் ஜனாதிபதி செயலகம் 833 வாகனங்களைப் பயன்படுத்தியது என்றும் அவர் சுட்டிகாட்டினார். பின்னர், ஜனாதிபதி செயலகம் எப்படி 634 வாகனங்களைப் பயன்படுத்த முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி கேள்வி எழுப்பினார்.
"வீணடிப்பைக் குறைக்கவும், குறைந்தபட்ச வாகனங்களைப் பயன்படுத்தவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்தியாவிற்குள் நுழைந்த யுத்தம்! டியாகோ கார்சியா தீவில் பல்லிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்கள் - ஈரான் அதிரடி
வாகனங்களின் பயன்பாடு
அப்படியிருக்க, ஜனாதிபதி செயலகம் எப்படி 600-க்கும் மேற்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த முடியும்?" என்று அவர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த பிரதமர், வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதாக மட்டுமே அரசாங்கம் உறுதியளித்திருந்தது என்றார். "வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதாக மட்டுமே நாங்கள் உறுதியளித்தோம், அதைச் செயல்படுத்தியும் விட்டோம்.
இந்த உண்மையை நாடாளுமன்ற உறுப்பினர் புரிந்து கொள்ளவில்லை என்றால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது," என்று அவர் கூறினார்.
மேலும், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஜனாதிபதி செயலகத்தால் முன்னர் பயன்படுத்தப்பட்ட சுமார் 60 வாகனங்கள் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.